internet

img

ரயில் தாமதம்; 100 க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வை எழுத முடியவில்லை

ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்ததால் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு முடிவடைந்தது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில முதலமைச்சரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் வட கர்நாடக மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது, இதற்கு கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் தேர்வு மையங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சரியான தகவல் பரிமாற்றம் இன்மையும் தான் காரணம்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தலையிட்டு தேர்வை தவறவிட்ட அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு கர்நாடக மாநில முதலமைச்சரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.